முகக்கவசம் அணிய மாட்டேனென அடம்பிடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன் முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போது வரை மருத்துவர்களால் ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை அமெரிக்க அதிபர் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதே கிடையாது. மாறாக தான் முகக்கவசம் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்ததோடு முகக்கவசம் அணிந்த தனது எதிர் வேட்பாளரான ஜோ பிடனை கேலி செய்தார்.
இத்தகைய சூழலில் வோஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை சந்திக்க வந்த போது ட்ரம்ப் முகக்கவசம் அணிந்து இருந்தார்.
இதேவேளை தானும் முகக்கவசம் அணிந்து அமெரிக்கர்களையும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக வல்லரசுகளையே திண்டாட வைத்த கொரோனா தற்போது அதிபர் ட்ரம்பையும் அடிபணிய வைத்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments