பலாங்கொடை - இராவணாகந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக குருதிப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாள் திடீரென அந்த மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது சந்தேக நபரான இளைஞரின் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அந்த மாணவிக்கு அதிகமான குருதிகசிவு ஏற்பட்டிருந்ததன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகநபரால் மாணவி கடத்தப்பட்டு இப்படி நடந்திருக்கலாம் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



0 Comments