ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கட்சியால் எந்த வேலைகளும் நடக்கவில்லை என்பதற்காக கட்சியின் சின்னமான யானையை கொலை செய்ய இடமளிக்க முடியாதென கட்சியின் தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வலப்பனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பலமிக்கதாக உருவாக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை சரியான வழிக்கு கொண்டு வந்து கட்சியை வலுப்படுத்துவோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சரியான வழிக்கு வரவில்லை என்றால் அவரை கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து விலகுமாறு கோருவோம்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் ஒரே மேடையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட போதிலும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் விருப்பு வாக்கு போட்டி காரணமாக தனித்தனியாக பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு செல்லாத கட்சியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments