தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்புக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது ஆகையால் இது ஒரு இன அழிப்பு என சர்வதேச நீதிமன்றம் தண்டனை வழங்குமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் இந்த தேர்தல் களத்திலே களமிறங்கியிருப்பது பாராளுமன்ற ஆசனத்திற்காக அல்ல. இந்த இனத்தின் விடுதலைக்காகவே.
விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இன்று நடுத் தெருவில் நிற்கின்றனர். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு அங்குலம் நிலம் கூட சிங்களவர்களால் அபரிக்கப்படவில்லை.
முன்னர் பேரை நடாத்திய தற்போதைய ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பௌத்த பிக்குகள் அனைவரும் வடக்கு கிழக்கை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக செயலணி அமைத்து தமிழ் மக்களை அடிமையாக்கி இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனவும் இங்கு தமிழர்களுக்கு கலாச்சாரம் இருக்க கூடாதென்பதற்காக பல கட்சிகளையும் அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளது.
சூரியனன் சின்னத்தில் போட்டியிட்டாலும் அது மகிந்த ராஜபக்ஷவின் அருவருடிகள் தான். போட் சினத்தில் போட்டியிட்டாலும் அவர் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும்.
இதேவேளை கருணாவும் பிள்ளையானும் ஒட்டுக் குழுவாக இருந்து மக்களை மிதித்தவர்கள். இன்று அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள்
இவர்களைப் போன்ற ஒட்டுக் குழுக்களால் தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாய் தகப்பனின்றி இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



0 Comments