ஸ்ரீலங்காவில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 06 ஆம் திகதி பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களிடம் இது குறித்து ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி பரீட்சை நடைபெறுமென எந்தவொரு மாணவரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments