பிரித்தானியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மிகப்பெரிய மாபியா கும்பலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் வெனெடிக் என அழைக்கப்படும் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் மிகபெரிய மாபியா கும்பலின் 100 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உலகெங்கிலும் உள்ள குறித்த குழுவின் உறுப்பினர்களை தொடர்பு படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட அசாத்தியமான ரகசிய தொலைபேசி வலையமைப்பும் பொலிஸாரினால் சிதைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களிடமிருந்து 54 மில்லியன் டொலர் கறுப்புப் பணம், 02 தொன் போதைப் பொருட்கள் மற்றும் 77 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பறியும் நிபுணர்களே தகவல்தொடர்புகள் மூலம் குறித்த குழுவின் இரகசியங்களை கண்டறிந்துள்ளனர்.
குற்றவியல் நிறுவனம் ஐரோப்பிய படைகளுடன் இணைந்து இவர்களின் தொலைபேசி வலையமைப்பில் முறையாக ஊடுருவி இவர்கள் பற்றிய தரவுகளை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து இச்சுற்றிவளைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









0 Comments