கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



0 Comments