The Finance நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 35ஆயிரம் பேருக்கு இழப்பீடு வழங்கப்படுமென மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுனர் எச்.ஏ.கருணாரட்ன அறிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு நிதி வணிகத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் கடந்த மாதம் 22ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதில் சிக்கல் எழுந்தது.
The Finance நிறுவனத்தில் வைப்புச் செய்த வாடிக்கையாளர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்களில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு முதற்கட்டத்தின் கீழ் ஆறு இலட்சம் ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு இழப்பீடு வழங்கப்படும்.
அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்தவுள்ளதாகவும், இதற்காக மக்கள் வங்கியின் 63 கிளைகள் ஊடாக சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுனர் எச்.ஏ.கருணாரட்ன கூறினார்.



0 Comments