சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் மோசடி மற்றும் முறைகேடுகளை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்
மேலும் சிறைச்சாலைகளுக்குள் நடந்த இப்படியான சம்பவங்களுக்கு உதவிய சில அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்காக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சிறைச்சாலைகளின் அதிகாரிகள் நாட்டின் முன்னணி போதைப் பொருள் வியாபாரிகளான வெலே சுதா, கஞ்சிபான இம்ரான் போன்றவர்களின் பணத்தில் தமது குடும்பம் மற்றும் பிள்ளைகளை போஷிக்க முயற்சிக்காது நேர்மையாக தமது சேவை காலத்தை தாமே பூர்த்தி செய்ய வேண்டும்.
சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கும் எனவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.



0 Comments