கொழும்பு கிருளப்பனை - பொல்ஹேன்கொடை இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த இராணுவச் சிப்பாய் நேற்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ஹொரவப்பொத்தனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இராணுவச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கிருளப்பனை பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments