சஹ்ரானை வைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது போல சிறுபான்மைச் சமூகத்தை நசுக்கி பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியுமென்றும் தற்போதைய அரசாங்கம் நினைப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது பேசிய அவர்,
தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் அரசியல் தலைவர் எவரையாவது கைதுசெய்து 'நாங்கள் சிறுபான்மைச் சமூகத்தை நசுக்கிக்கொண்டிருக்கிறோம்' என்று பெரும்பான்மைச் சமூகத்திற்கு காண்பித்து பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நினைக்கின்றது என்றார்.



0 Comments