தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போட்டத்தை காட்டிக்கொடுத்ததற்கான பலனை கருணா தற்போது அனுபவிப்பதாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்ட கருணாவை தமிழன் என்ற காரணத்திற்காகவே கைது செய்யுமாறு சிங்கள பேரினவாதிகள் கொக்கரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
அதேவேளை, எந்தவொரு ஆயுத போராட்டத்திலும் கலந்து கொள்ளாத சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments