வடகொரியாவில் சமீபத்திய செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் விசித்திரமானவையாக உள்ளதனால் நாட்டின் தலைவரான கிம் ஜோங் உன்னின் உடல் நலம் குறித்து சந்தேகங்கள் உள்ளதாக ஜப்பானின் பாதுகாப்பு மந்திரி டரோ கொனோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சில நாட்கள் பொதுவெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
அவை எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் கிம் ஜோங் உன் வடகொரியாவின் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தென்கொரியாவுடன் சமீபத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வடகொரியா எடுத்து வருகிறது.
அதிபர் கிம் ஜோங் உன் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முயற்சித்து வருகிறார். ஏனெனில் நாடு முழுவதும் வைரஸ் பரவுகிறது.
ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் அவரைப் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜப்பானின் இந்த சந்தேகத்தால் தற்போது மீண்டும் அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments