மன்னார் பேசாலைப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 06 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை யூட்ஸ் வீதியின் பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 06 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 06 நபர்களும் பேசாலை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த 06 நபர்களையும் பிணையில் செல்ல பதில் நீதவான் அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.




0 Comments