கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் சூழலைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் டேவிட் ஸ்டில்வெல் குற்றம் சாட்டியுள்ளாா்.
தொலைபேசி வாயிலாக செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இச்சூழலில் எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எளிதில் தீா்வு கண்டுவிடலாமென சீனா கருதுகிறது.
அதன் காரணமாகவே இந்திய எல்லைப் பகுதியில் இராணுவத்தினருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது.



0 Comments