கொரோனா தீவிரமாக பரவியதை அடுத்து இங்கிலாந்தில் அமுல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் ஜூலை 4 ஆம் திகதி முதல் தளர்வு அமுலுக்கு வருவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பப்கள் ஜூலை 4 முதல் திறக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட இடைவெளியுடன் திரையரங்குகளை திறக்கவும், வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்தும் பொரிஸ் ஜோன்ஸன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முடிதிருத்தகங்கள், ஹோட்டல்கள், விடுமுறை இல்லங்கள் ஆகியவை இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு விடுதிகள், பனிச்சறுக்கு மையங்கள், ஸ்பாக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.



0 Comments