அம்பலந்தொட்ட நவகம்கொட பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான பெண் குழந்தை ஒன்றை காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் திருத்தம் செய்யும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் குழந்தையை வெள்ளை துணியில் சுற்றி நவகம்கொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் மின் கம்பத்திற்கு அருகில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரதேசவாசிகள் அம்பலந்தொட்ட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை குறித்த இடத்தில் போட்டு விட்டு சென்றவர்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments