ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1,252 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 621 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments