ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தின் கதினாவ நகரில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கில் நேற்றையதினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்தில் விமானப் படைத்தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தீப்பரவலை விமானப் படை தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25 ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments