அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தமது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடகொரியா திடீரென அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருமுறை நடத்திய நேரடி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு நிலவுகிறது.
இந்நிலையில், வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சோன் குவோன் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் இருதரப்பு உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை ட்ரம்பின் அரசியல் சாதனைகளுக்காக நடத்த விரும்பும் அத்தகைய சந்திப்புகள் இனி நிகழாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடகொரியா ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Comments