சிறுவர்களை தமது படையணியில் சேர்த்துக் கொண்டமைக்காக கருணாவை விசாரிக்க வேண்டுமென ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமை அலுவலகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது
கடந்த கால குற்றங்களுக்காக விடுதலைப்புலிகளின் முனனாள் தளபதி கருணா விசாரிக்கப்படுவதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.சிறுவர்களை படையணியில் சேர்த்துக்கொண்டமை சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றச்செயலாகும். இலங்கையில் உள்ள அனைவருக்கும் பொறுப்புக்கூறல் பொருந்தும் எனவும் தனது பதிவில் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.



0 Comments