வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி சயந்தன் சபைநாகரிகம் தெரியாமல் நடந்துகொள்வது மிகவும் வேதனையை தருகின்றது.அத்துடன் அவர் கூறும் நபரை ஆதரித்து என்னால் வேலைசெய்ய முடியாது.
இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ரவிராஜ் சசிகலா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நேற்றைய தினம் சாவகச்சேரி தமிழரசுகட்சியின் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம், கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் என்னை பேசுவதற்கு அழைக்கும்போது சயந்தன் நடந்துகொண்ட விதம் மனதிற்கு மிகவும் வேதனையை தருகின்றது.
என்னுடைய கணவர் மிகவும் துணிச்சலானவர்,மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்,இப்படியான ஒருவரின் மனைவியான நானும் அவரின் பாதையில் பயணிக்க சயந்தன் பல முட்டுக்கட்டைகளை போடுகின்றார்.
எனக்கும் எனது மக்களிற்கும் எதிரான நபரை என்னால் ஆதரிக்கமுடியாது.
எனது கட்சிதலைமை மதிப்புக்குரிய மாவை ஐயாவின் வழிநடத்தலில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளவர்களுடன் என்னால் பயணிக்க முடியாது எனதெரிவித்துள்ளார்.



0 Comments