பிரதமர் மகிந்த ராஜபக்ச வழமை போன்று சர்வதேச சூழ்ச்சி தொடர்பில் பேசத் தொடங்கிவிட்டார் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மங்கள,
இலங்கை இறையாண்மை மற்றும் பொருளாதார தலம்பல் நிலைக்குள் மூழ்கியுள்ள தற்போதைய நிலையில் பிரதமர் வழமைப் போன்று சர்வதேச சூழ்ச்சி குறித்து மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.
சர்வதேச சதித்திட்டம் என கூறி மீண்டும் பலமான ஒரு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள அவர் ஆரம்பித்துள்ளார். அதாவது இராணுவமயமாக்களுக்கான பலத்தையே அவர் கோரியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.




0 Comments