தென்கொரியா - வடகொரியாவுக்கு இடைப்பட்ட இராணுவம் விலக்களிக்கப்பட்ட பகுதியில் தமது படைகளை குவிப்போம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
தென்கொரியாவுடனான தொடர்புகளை துண்டித்த வடகொரியா அண்மையில் ஹேசாங் நகரில் கட்டப்பட்ட கொரிய தகவல் தொடர்பு கோபுரத்தை தகர்த்து எறிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.
இதேவேளை அக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் படைகளை குவிக்க போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அங்கு இராணுவ சோதனைச் சாவடிகளையும் அமைக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.



0 Comments