நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சகத்தின் பிரதானி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இதுவரை 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் இன்று அச்சிடப்பட்டு விரைவில் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும். எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
இதேவேளை ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வாக்குச்சீட்டுகள் நீள அகலத்தினால் வேறுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Comments