வவுனியா பெரியகட்டு பகுதியில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் மன்னார் எழுத்தூரில் வசிக்கும் சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 43 வயதுடைய ஆ.ரகு சங்கர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





0 Comments