கடந்த ஐந்தாண்டுகளில் 88 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாகவும் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் சாட்சியமளித்துள்ள அவர்,
இலங்கையில் உள்ள 8 ஆயிரம் வேற்று மதத்தினர் மற்றும் தொழில்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள 80 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வாறு 88 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், இஸ்லாம் அடிப்படைவாதம் பற்றி தான் கூறிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை.
அல் குர் ஆன் கற்பிப்பதற்கு அப்பால் சென்ற ஹதீஸ்களில் காணப்படும் விடயங்களுக்கு வஹாப்பிசம் மற்றும் அடிப்படைவாதம் பரப்பபடுவதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கருத்துரைத்திருந்த ஞானசார தேரர், சிங்கள பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் இவ்வாறு இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்படுவதாகவும் ஞானாசர தேரர் கூறியிருந்தார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Comments