முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தற்போதைய ஜனாதிபதி நந்தசேன எனவும் இரண்டு சேனாக்களும் ஒரே மாதிரியானவர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அரச அதிகாரிகளை சந்தித்துப் பேசியது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கண்டோம். அரச அதிகாரிகளை திட்டுவதால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் நினைக்கவில்லை.
தனது சகோதரரான பிரதமர் மீதுள்ள கோபத்தையே ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்தி, அந்த அதிகாரிகள் மீது தனது கோபத்தை காட்டியிருக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தற்போதைய ஜனாதிபதி நந்தசேன எனவும் இரண்டு சேனாக்களும் ஒரே மாதிரியானவர்களே என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழுப் பெயர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.



0 Comments