தம்புளை-அருவ்வல்ல பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் சில்லு ஒன்றுடன் இணைக்கப்பட்டு உயிருடன் தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்த நபர் வேறொரு இடத்தில் வைத்து தாக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments