ஒரே இரவில் எமது இராணுவத்தினரை பெருமளவில் கொன்றதாக பெருமைப்படும் கருணாவை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்களென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
பயங்கரவாத அமைப்புகளில் இருந்த காலத்தில் செய்த வீரச் செயல்களை மீண்டும் பெருமையாக கூறிக்கொள்ள ஒருவர் முயற்சிப்பது ஏற்கக்கூடியதல்ல.
எனவே தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர்.
ஜே.வி.பி செயலாளரான டில்வின் சில்வா தனது தோள் மீது ஆயுதங்களை சுமந்து சென்ற போதே வாத்துவ ரயில் நிலையத்தில் வைத்து இராணுத்தினரால் பிடிக்கப்பட்டார்.அதனால் தற்போதும் டில்வின் சில்வாவுக்கு அரசியல் செய்ய அதிகாரமில்லை எனக் கூறமுடியாது.
எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த அமைப்பிலிருந்து விலகியிருக்கவும், பயங்கராவாத கொள்கைகளை கைவிட்டுச் செயற்படவும் அதிகாரம் உள்ளதெனவும் தெரிவித்தார்.



0 Comments