கொரோனா உலகையே புரட்டி போட்டுள்ளது. இந்நேரத்தில் மக்கள் பலருக்கும் மிகுந்த அவசியமான தேவை மன தைரியம் தான். மன அழுத்தம் தான் பலரை ஆட்டிப்படைக்கிறது.
கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் ஒரு பக்கம் என்றால், உடல் நலக்குறைவால் மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சினிமாவிலும் அண்மைகாலமாக தொடர் மரணங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் மலையாள சினிமாவில் 25 ஹிட் படங்களை கொடுத்த பப்புகுட்டி பாகவதர் கடந்த திங்கள் கிழமை இறந்துபோய்விட்டாராம்.
அவருக்கு வயது 107. வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சினிமாவில் பாடகராகவும் இருந்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகராக இருக்கும் மோகன் ஜோன்ஸ் இவரின் மகன், அதே போல இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் இவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பப்புகுட்டி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சினிமா பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



0 Comments