சிங்கப்பூரில் சிறையிலிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமூக நுழைவு அனுமதி அட்டையை வைத்திருந்த அவர், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து சாங்கி சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிருமி பரவல் தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர், அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
6ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மற்ற கைதிகளிடமிருந்து 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.



0 Comments